நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளின் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில், இரு கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
சிறைச்சாலைக்குள் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட இந்த மோதலைக் கட்டுப்படுத்தி, நிலைமையை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காகப் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் அதிரடியாகக் களமிறக்கப்பட்டுப் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.
