Posts

திருகோணமலையில் நடுக்கடலில் கவிழ்ந்த மீன்பிடிப் படகு!


திருகோணமலை கடற்பரப்பில் மீன்பிடிப் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளதுடன், மேலும் இருவர் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை மூன்று மீனவர்கள் திருகோணமலை கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

படகு கவிழ்ந்ததை அடுத்து, அதிலிருந்த இரு மீனவர்கள் போராடி மீண்டும் தங்களது  (Dinghy) படகை வந்தடைந்துள்ளனர். 

பின்னர் இச்சம்பவம் குறித்து அவர்கள் உடனடியாக இலங்கை கடற்படையினருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, காணாமல் போன மீனவரைக் கண்டறியும் நோக்கில் கடற்படையினர் உள்ளூர் மீனவ சமூகத்தின் உதவியுடன் தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணியை முடுக்கிவிட்டுள்ளனர். 

காணாமல் போனவர் அந்த  படகின் உரிமையாளர் என நம்பப்படுகிறது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment