வரலாறு காணாத வகையில் எகிறியது-எரிபொருள் விலைகள்

 

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் போர் ரீதியான பதற்றம் தொடர்ந்தும் தீவிரமடைந்து வருவதால், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. 

கடந்த ஆறு வாரக் காலத்தில் பதிவான மிக உயர்ந்த விலை மதிப்புகளைக் குறிக்கும் வகையில், உலக சந்தையின் பிரதான எண்ணெய் குறியீடுகளான ப்ரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 98 அமெரிக்க டொலர் எல்லையைத் தாண்டியுள்ளது. 

அதேபோல், WTI கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலையும் 90 அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளது. 

இதனிடையே, கச்சா எண்ணெய் விலையேற்றம் ஆசிய சந்தையிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment