சற்று முன் அதிர்ந்தது இந்தியா-வீடுகளை விட்டு ஓடிய மக்கள்

 

இந்தியாவில் மராட்டியத்தில் பெய்துவரும் தொடர் மழையால், பல்வேறு நகரங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, மராட்டியத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

நான்டெட், ஹிங்கோலி மற்றும் பர்பானி மாவட்டங்களில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. 

இன்று  ஏற்பட்ட இந்த நில நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.6 முதல் 4.6 வரை பதிவாகியுள்ளது. இதனால் கட்டிடங்கள் லேசான குலுங்கியதால் அச்சமடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 

இந்த நிலநடுக்கம் பஸ்மத், கலம்நூரி, அவுந்தா நாக்நாத், ஹிங்கோலி மற்றும் அதன் அண்டைப்பகுதிகளில் பரவலாக உணரப்பட்டன. இந்த லேசான நிலநடுக்கத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

Post a Comment