ஆகஸ்ட் ஒன்றாம் திகதி சுக்கிர பகவான் கன்னி ராசியில் பெயர்ச்சி ஆகிறார். சுக்கிர பகவான் உடைய இந்த பெயர்ச்சி சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் செல்வத்தை கொடுக்க போகிறது.
ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியமான கிரகமாக சுக்கிர பகவான் இருக்கிறார். மேலும், சுக்கிர பகவான் முப்பது நாட்களுக்கு ஒரு முறை அவருடைய ராசியை மாற்றிக் கொண்டிருக்கிறார். சுக்கிர திசை எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொடுக்க போகிறது என்று பார்ப்போம்.
ரிஷபம்: இவர்களுக்கு இந்த காலகட்டம் மனதில் இருந்த கவலைகள் விலகப் போகிறது. முகம் பொலிவாக தோற்றமளிக்கும். நேர்மறை சிந்தனைகள் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் விலகும். திருமண வரன் தேடுபவர்களுக்கு நல்ல வரம் அமையும்.
மிதுனம்: இவர்களுக்கு இந்த காலகட்டங்களில் தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். உடல் நலனில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தினருடன் நல்ல மகிழ்ச்சியான நேரத்தை செலவு செய்வீர்கள். மனைவி மற்றும் வாழ்க்கை துணையுடன் நல்ல நேரம் செலவழிப்பார்கள். சுப காரிய தொடர்பான பேச்சுவார்த்தைகள் நல்ல முறையில் முடியும். தந்தை முழு ஆதரவு கொடுப்பார்.
தனுசு: இவர்களுக்கு இந்த காலகட்டங்களில் பணியில் புதிய பொறுப்புகள் தேடி வரும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஒரு சிலருக்கு நகை மற்றும் ஆடை சேர்க்கை உண்டாகும். நண்பர்கள் வழியே நல்ல உதவியை பெறுவீர்கள். நீண்ட நாட்கள் மனதில் இருந்த மந்த தன்மை விலகும்.
