சுட்டெரிக்கும் வெப்பம்-அடுத்து அடுத்து தொடரும் மரணம்-சற்று முன் வரை-9800 பேர் பலி

இந்த ஆண்டில் இதுவரை ஜெர்மனியில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக சுமார் 9,800 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் RKI சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று  வெளியிடப்பட்ட இந்த அறிக்கையின்படி, இவ்வாறு உயிரிழந்தவர்களில் பெரும்பான்மையானோர் 75 வயது அல்லது அதற்கு மேற்பட்ட முதியவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டில் ஒரு வாரத்தின் சராசரி வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸை விட அதிகரித்ததன் காரணமாக, இந்த மரணங்களின் சதவீதம் வேகமாக உயர்ந்துள்ளது.

 

அதேவேளை, வரும் நாட்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் எல்லையைத் தாண்டக்கூடும் என்பதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என சுகாதாரப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.

Post a Comment