'ஹெட்போன்' அணிந்து வீதியில் நடப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

'ஹெட்போன்' அல்லது 'இயர்போன்' அணிந்து இசை கேட்டுக்கொண்டு வீதிகளில் நடந்து செல்லும் பாதசாரிகளுக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் எச்சரித்துள்ளது.

போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.

தற்போது இவ்வாறான பாதசாரிகளுக்கு எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டு வரும் நிலையில், வீதி விபத்துக்களின் அபாயம் அதிகரித்து வருவதால் எதிர்காலத்தில் அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.


Post a Comment