அம்பாறை உஹன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லாதுகல பகுதியில் இடம்பெற்ற கூர்மையான ஆயுதத்தினால் தாக்குதலுக்குள்ளாகி நபரொருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் பலத்த காயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று புதன்கிழமை (22) இரவு இடம்பெற்றுள்ளது.
தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் உடனடியாக அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளதாக உஹன பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர் லாதுகல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபருக்கும் உயிரிழந்த நபருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதையடுத்து, சந்தேகநபர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி இந்தக்கொலையைச் செய்துள்ளமை மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
