வெளிநாட்டில் பணி புரிந்து சேவைக் காலம் நிறைவடைந்து மீண்டும் நாட்டுக்குத் திரும்பும் தொழிலாளர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு, காணிகள் வழங்க சமகால அநுர அரசாங்கம் திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை, திட்டமிட்ட சேவைகளுடன் கூடிய பயன்படுத்தப்படாத காணிகளை வழங்கும் விசேட வேலைத்திட்டமொன்றை தயாரிக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இதன்போது அரசாங்கத்தால் வழங்கப்படும் காணிகள் தொடர்பில் வலுவான ஒப்பந்தங்களை செய்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டடியுள்ளார்.
மேலும் அது குறித்து ஆராய்வதற்காக நிதி அமைச்சு ஊடாக விசேட குழுவொன்றை நியமிப்பதற்கும் ஜனாதிபதி தீர்மானித்தார்.
அத்துடன், மலையக மக்களுகு்கு 10,000 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தை உரிய காலத்திற்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
வெளிநாட்டு உதவி மற்றும் கடன் திட்டங்களில் காணப்படும் பிரச்சினைகள் காரணமாக சில ஒதுக்கீடுகள் திருப்பிச் செல்வதை தவிர்ப்பதற்காக வினைத்திறனான பொறிமுறையொன்றைத் தயாரிக்குமாறும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
