Posts

இலங்கையை உலுக்கும் டெங்கு - ஜூலையின் முதல் 3 நாட்களிலேயே பேரதிர்ச்சி!


இலங்கையில் இந்த ஆண்டு டெங்கு நோயின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் சமீபத்திய தரவுகளின்படி, நடப்பு 2026 ஆம் ஆண்டில் நாடு தழுவிய ரீதியில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 58,000-ஐக் கடந்துள்ளது.

ஜூலை மாதத்தின் முதல் மூன்று நாட்களில் மட்டுமே 3,422 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இதன் மூலம் ஜூலை 3 ஆம் திகதி நள்ளிரவு வரையிலான மொத்தப் பாதிப்பு 58,810 ஆக உயர்ந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 39 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட ரீதியில் பார்க்கும்போது, மேல் மாகாணமே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டம் 12,017 தொற்றாளர்களுடன் முதலிடத்தில் உள்ளது.

கம்பஹா மாவட்டம் 11,740 தொற்றாளர்களுடன் அடுத்த இடத்தில் உள்ளது.

நாட்டின் ஒட்டுமொத்த டெங்கு நோயாளர்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்த இரு மாவட்டங்களிலேயே பதிவாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, கடந்த மே மாதத்தில் 8,590 ஆக இருந்த பாதிப்பு, ஜூன் மாதத்தில் 21,549 ஆகக் கொடூரமாக உயர்ந்துள்ளது.

Post a Comment