நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட திடீர் மோதலில் காயமடைந்த 20 கைதிகள் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலை வளாகத்துக்குள் ஏற்பட்ட இந்த அசாதாரண சூழ்நிலை மற்றும் வன்முறை மோதலுக்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
காயமடைந்த கைதிகளுக்கு வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
சிறைச்சாலைக்குள் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட இந்த மோதலைக் கட்டுப்படுத்தி, நிலைமையை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காகப் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் அதிரடியாகக் களமிறக்கப்பட்டுப் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.
