ஐந்தே வயதில் உலக சாதனை நிகழ்த்தி "RAABA BOOK OF WORLD RECORD"ல் தடம் பதிக்கவுள்ள நடன தாரகை ரஜீவன் ஹம்சத்வனி.

 

கலைத்துறையில் சிறுவயதிலேயே அபார திறமையை வெளிப்படுத்தி வரும் ஐந்தே வயதான நடன தாரகை ரஜீவன் ஹம்சத்வனி, பரதநாட்டியத் துறையில் புதிய உலக சாதனையை நிகழ்த்தவுள்ளார்.

தனது ஐந்து வயதில் 6 வயதிற்குட்பட்டோர் பிரிவில், தொடர்ச்சியாக 2 மணி 30 நிமிடங்கள் தனிநபராக (Solo) பரதநாட்டியம் நிகழ்த்தி "RAABA BOOK OF WORLD RECORD"ல் உலக சாதனை படைக்கும் முயற்சியில் அவர் ஈடுபடவுள்ளார்.

குறித்த நிகழ்வானது 28.06.2026 அன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள  சோலைவனம் விருந்தினர் தங்ககத்தில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், சாதனை நிகழ்த்தப்பட்ட பின்னர் கெளரவிப்பு நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வு கலை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பரதநாட்டியத்தின் மீது ஆழ்ந்த ஈடுபாடும் அர்ப்பணிப்பும் கொண்ட ரஜீவன், அஜந்தினி தம்பதிகளின் செல்வ புதல்வி  ஹம்சத்வனி, தனது இளம் வயதிலேயே பல்வேறு மேடைகளில் திறமையை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெற்றுள்ளார். 

தற்போது மேற்கொள்ளவுள்ள இந்த நீண்ட நேர தனிநபர் பரதநாட்டிய நிகழ்ச்சி, அவரது திறமை, விடாமுயற்சி மற்றும் கலைப்பற்று ஆகியவற்றை உலக அரங்கில் எடுத்துக்காட்டும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்சாதனையை வெற்றிகரமாக நிறைவேற்றி, 6 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 2 மணி 30 நிமிடங்கள் தொடர்ச்சியாக தனிநபராக பரதநாட்டியம் நிகழ்த்திய, ஐந்து வயதான இளம் நடனக் கலைஞராக ரஜீவன் ஹம்சத்வனி உலகளவில் புதிய மைல்கல்லை பதிக்கிறார்.

கலை உலகின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த உலக சாதனை முயற்சிக்கு பலரும் வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.

Post a Comment