அமெரிக்காவில் பெட்ரோல் விலையை உடனடியாகக் குறைக்குமாறு எரிபொருள் சில்லறை விற்பனையாளர்களுக்கு டொனால்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தவறும் பட்சத்தில் பாரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், "பெட்ரோல் சில்லறை விற்பனையாளர்கள் விலையை உடனடியாகக் குறைக்க வேண்டும். விலையை செயற்கையாக உயர்த்தி மக்களைச் சுரண்டுவது முற்றிலும் சட்டவிரோதமானது. ஒரு கலன் பெட்ரோலின் விலையை 2 தசம் 5 பூச்சியம் டொலராக ($2.50) இலக்கு வைத்து விலைக் குறைப்பைச் செய்ய வேண்டும்." என வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், அமெரிக்க மக்களின் நலனுக்காக விலைகளை விரைவாகக் குறைக்குமாறும், இல்லையெனில் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிவரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
.jpeg)