சனி பகவானால் உருவாகும் சக்திவாய்ந்த யோகம் ; இந்த ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் காத்திருக்கு...

 

ஜோதிடத்தில் மிகவும் சக்திவாய்ந்த பஞ்ச மகாபுருஷ யோகங்களில் ஒன்றாக கருதப்படுவது சச யோகம் ஆகும். இந்த யோகம் சனி பகவானால் உருவாகும் ஒரு ராஜயோகம். சனி பகவான் தனது சொந்த ராசிகளான மகரம், கும்பம் அல்லது உச்ச ராசியான துலாமில் இருந்து லக்னத்திற்கு 1, 4, 7, 10 ஆகிய கேந்திர ஸ்தானங்களில் அமரும்போது இந்த யோகம் உருவாகிறது.

சச யோகம் பெற்றவர்களுக்கு வாழ்க்கையில் அதிகாரம், செல்வாக்கு, நிலையான செல்வம், நிர்வாகத் திறன் மற்றும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து கிடைக்கும் என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு அவர்களுடைய கிரகங்களின் அமைப்பின்படி சனியின் சாதகமான ஆதரவால் இவர்களுக்கு தொழில் மற்றும் வியாபார ரீதியாக மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் கிடைக்கப் போகிறது. நீண்ட நாள் உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரத்தை பெறுவார்கள். எதிர்பார்த்து காத்திருந்த காரியங்கள் இவர்களுக்கு நினைத்தது போல் நடக்கும். சமுதாயத்தில் மரியாதையும் உயர்வையும் பெறுவார்கள். பூர்விக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் விலகும்.

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு சச யோகத்தால் நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த காரியங்கள் மிக வேகம் எடுத்து வெற்றிகரமாக அமைகிறது. அரசு சார்ந்த வேலைகள் வழக்குகள் மற்றும் காரியங்கள் வெற்றிகளை பெறும். வேலை மற்றும் தொழிலில் உங்களுடைய திறமைக்கேற்ற மதிப்பும் அங்கீகாரமும் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அற்புதமான வாய்ப்புகள் தேடி வரும். கனவு நினைவாகும்.   

சிம்மம்: உங்களுடைய ஆளுமைத் திறனும் தைரியமும் கூடும். சமூகத்தில் உங்களின் செல்வாக்கும் கௌரவமும் உயர்வடையும். குறிப்பாக, அரசியல் மற்றும் நிர்வாகத் துறையில் இருப்பவர்களுக்குப் புதிய, முக்கியமான பதவிகள் கிடைக்கும் பொன்னான காலமிது. உங்களின் கடின உழைப்பிற்கு ஏற்றவாறு நண்பர்கள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். அவர்களின் உதவியால் நீண்ட நாட்களாகத் தள்ளிப்போன காரியங்களை வெற்றிகரமாக முடித்து, பெரிய சாதனைகளை நிகழ்த்துவீர்கள். பொருளாதார நிலையும் சீராக உயரும்.

மகரம்: சனி பகவானின் சொந்த ராசியான மகர ராசியினருக்கு, இந்த காலகட்டம் மிகச் சிறப்பானதாகவும் திருப்பங்கள் நிறைந்ததாகவும் அமையப் போகிறது. சனியின் ஆதிக்கத்தால், பல ஆண்டுகளாக இழுபறியாக இருந்த காரியங்கள் மற்றும் நிலுவையில் இருந்த வழக்குகள் அனைத்தும் உங்களுக்குச் சாதகமாக முடிவடைந்து, நல்ல தீர்வு கிடைக்கும். திடீர் பணவரவு அதிகரித்து, பொருளாதார நிலைமை மிகவும் சீராகும். சமூகத்தில் உங்களுக்கான அந்தஸ்தும், கௌரவமும் உயரும். வேலை செய்யும் இடத்தில் உங்களின் திறமைக்குக் தகுந்த தலைமைப் பொறுப்புகள் தேடி வரும். அந்தப் பொறுப்புகளைச் சரியாகப் பயன்படுத்திப் பெரிய சாதனைகளைப் படைப்பீர்கள். உங்களின் விடாமுயற்சிக்கு ஏற்ற முழுப் பலன்களும், மனநிறைவும் கிடைக்கும் பொன்னான காலமிது.

Post a Comment