பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!


நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தற்பொழுது மிகத் தீவிரமாக அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரித்துள்ளது.

இலங்கையில் நேற்று (21)  ஒரே நாளில் மாத்திரம் புதிதாக 1,069 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இந்த ஆண்டில், ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பருவமழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை உள்ளிட்ட மேல் மாகாணத்தில் தான் அதிகளவிலான பாதிப்புகள் பதிவாகியுள்ளன. 

நிலவிவரும் இந்த அபாயகரமான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் சூழலில் நீர் தேங்கி நிற்கும் இடங்களை உடனடியாக சுத்தம் செய்யுமாறு சுகாதார அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment