உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை இரண்டாவது முறையாகவும் அதிகரித்துள்ளதாக, அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த 20 ஆம் திகதி ஒரு பவுண் தங்கத்தின் விலை 382,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது.
இன்று காலை அதன் விலை 2,000 ரூபாயால் அதிகரித்து 384,000 ஆயிரம் ரூபாயாக உயர்ந்தது.
தொடர்ந்து, இன்று நண்பகலுக்குப் பின்னர் மேலும் 2,000 ரூபாயால் அதிகரித்து, தற்போது ஒரு பவுண் 386,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, இன்று மாத்திரம் இதன் விலை மொத்தமாக 4,000 ரூபாயால் அதிகரித்துள்ளது.
தற்போது ஒரு பவுண் 355,100 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
