முற்றுகையிடப்பட்ட விபச்சார விடுதிகள்-34 அழகிகளுடன் கைதான 09 ஆணழகர்கள்

 

கொழும்பின் புறநகரான தலவத்துகொட பகுதியில் ஸ்பா என்ற போர்வையில் நடாத்திச் செல்லப்பட்ட 09 பாலியல் தொழில் விடுதிகள் முற்றுகையிடப்பட்டுள்ளன.

இந்த முற்றுகை நடவடிக்கைகளின் போது 34 பெண்கள் உட்பட 43 பேர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்

கடுவெல நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த தேடுதல் உத்தரவின் படி குறித்த தலவத்துகொட பகுதிகளில் நேற்று திடீர் சோதனை நடத்தப்பட்டிருந்தது.

இதன் போதே 09 விபச்சார விடுதிகள் முற்றுகையிடப்பட்டு 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் விபச்சார விடுதிகளின் மேலாளர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார்  தெரிவித்தனர்.



Post a Comment