நேற்றிரவு சொகுசு பஸ் மூலம் கொழும்பு சென்ற அரச உத்தியோகத்தர் மீதும் இன்னொரு பெண் மீதும் பஸ்சை மறித்து உள்ளே புகுந்த பெண்ணும் 20 வயதான யுவதியும் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
அரியாலை நெடுங்குளம் சந்திக்கு அருகில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கச்சேரிடியப்பகுதியிலிருந்து பஸ்சை தமது மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்த தாயும் மகளுமே நெடுங்குளம் சந்திப்பகுதிக்கு அருகில் வைத்து பஸ்சை மறித்து அரச உத்தியோகத்தரையும் அவருடன் இருந்த மற்றொரு பெண்ணையும் தாக்கியுள்ளார்கள்.
பஸ்சில் தாக்குதலுக்கு உள்ளான அரசஉத்தியோகத்தரையும் பெண்ணையும் நடுவீதியில் இறக்கிவிட்டுவிட்டு சொகுசு பஸ் அங்கிருந்து சென்றுவிட்டதாக பயணிகள் தெரிவிக்கின்றார்கள்.
மாகாணத் திணைக்களம் ஒன்றில் பதவிநிலை உத்தியோகத்தராக உள்ளதாகக் கருதப்படும் 50 வயது மதிக்கத்தக்க நபர் யாழ் நகரப்பகுதியில் இருந்து ஏறியுள்ளார்.
அவர் ஏற்கனவே தனக்கு அருகில் இன்னொரு சீற் பதிவு செய்து வைத்திருந்துள்ளார். அதன் பின்னர் 40 வயதான திருமணமான பெண் கச்சேரிக்கு அருகில் இருந்து ஏறியுள்ளார். அவர் குறித்த பஸ்சில் ஏறிய பின்னர் சற்றுத் தொலைவில் பஸ் மோட்டார் சைக்கிளில் நின்ற இரு பெண்களால் மறிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் பஸ் அங்கு நிற்காது சென்ற போது பஸ்சை மோ்டார் பின்தொடர்ந்து வந்து நிறுத்தியதாகத் பயணிகள் தெரிவிக்கின்றார்கள்.
பஸ்சிலிருந்த கீழே இறங்கிய நடத்துனரை தள்ளிவிட்டு பஸ்சினுள் ஏறிய 45 வயது மதிக்கத்தக்க தாயும் 20 வயது மதிக்கத்தக்க மகளும் சேர்ந்து அரச உத்தியோகத்தரையும் அவருடன் சேர்ந்து இருந்த பெண்ணையும் ஹெல்மட் மற்றும் கைகளால் தாக்கியுள்ளார்கள்.
அரச உத்தியோகத்தருடன் சேர்ந்திருந்த பெண்ணை உள்ளே புகுந்த மகள் தலைமுடியை பிடித்து இழுத்து கதறக் கதற தாக்கியுள்ளார். நடத்துனர் மற்றும் சாரதி மற்றும் பஸ்சில் இருந்தோர் தடுக்க தடுக்க தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவருகின்றது.
அதே நேரம் மனைவி தனது கணவனை தாக்கியதுடன் ஆவேசமாக தகாத வார்த்தைகளால் ‘இதோட இவள் உனக்கு எத்தனையாவது? இந்த ….. இருந்தால்தானே இன்னும் திரிவாய் என குக்குரல் இட்டு கத்திக் கொண்டு கணவனின் ஆண் உறுப்பு மீதும் தாக்க முற்பட்டுள்ளார்.
இதனையடுத்து அங்கிருந்தவர்கள் நான்கு பேரையும் பஸ்சை விட்டு இறக்கியதுடன் அவர்களின் பிரயாணப்பைகளையும் துாக்கி வைத்துவிட்டு பஸ் அங்கிருந்து சென்றுள்ளதாக பயணிகள் தெரிவிக்கின்றார்கள்.
