பணிக்கு சென்ற செவிலியர் சம்பவ இடத்திலே பலி

 

ஹெட்டிபொல - படுவஸ்நுவர வீதியின் கொட்டன்பிட்டிய சந்தியில் இடம்பெற்ற விபத்தில்  இளம் செவிலியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தானது நேற்றுமுன்தினம்(2.5.2026) இடம்பெற்றுள்ளது.

சிலாபம் பொது வைத்தியசாலையின் 12ஆம் இலக்க வார்டில் பணியாற்றிய இளம் செவிலியரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்

நிகவெரட்டிய பணிமனைக்குச் சொந்தமான இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் சென்ற லொறி மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களுடன் மோதியுள்ளது.

பின்னர் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வீதியோரக் கடையொன்றுக்குள் பேருந்து புகுந்துள்ளது.

அந்த நேரத்தில், சிலாபம் பொது வைத்தியசாலையின் பணிக்குச் செல்வதற்காக அந்தக் கடையின் அருகில் பேருந்திற்காக காத்திருந்த ஹசித மலவிசிங்க என்பவர் இந்த விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்துத் தொடர்பாக பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் சாரதியின் கவனக்குறைவா அல்லது பேருந்தின் இயந்திரக் கோளாறா விபத்திற்கு காரணம் என்பது குறித்து ஹெட்டிபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

Post a Comment