இரத்தினபுரி - பெல்மதுல்ல வீதியில் பாரவூர்தி ஒன்றும் மற்றும் முச்சக்கர வண்டியும் மோதிக்கொண்டதில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் ஹாலி எல பகுதியைச் சேர்ந்த 49 மற்றும் 28 வயதுடைய தாய் மகன் என தெரியவந்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கர வண்டி ஓட்டுநர், தற்போது இரத்தினபுரி போதனா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பாரவூர்தி ஓட்டுநரையும், அவரது உதவியாளரையும் பெல்மதுல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்
