அரச நியமனம் கிடைக்காமல் அரச அலுவலகங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு

 

அரச நிறுவனங்களில் 'மேன்பவர்' ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய குழு நியமனம்

ஒரே மாதிரியான வேலைக்குச் சமமான ஊதியம் வழங்கும் கொள்கையை உறுதிப்படுத்த நடவடிக்கை

அண்மைக் காலங்களில் அரச நிறுவனங்கள் சிலவற்றின் முக்கிய பணிகளுக்காக வெளியக மனிதவலு (Manpower) முகவர் நிலையங்கள் ஊடாகத் தற்காலிக ஊழியர்களைப் பணியமர்த்தும் போக்கு அதிகரித்துள்ளது.

இவர்களில் பலர் நீண்டகாலமாகப் பணியாற்றிய போதிலும், அவர்களுக்கு வேலைப் பாதுகாப்பு, சட்டபூர்வ நன்மைகள் அல்லது முறையான அங்கீகாரம் கிடைப்பதில்லை. 

இது சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 'சமமான வேலைக்குச் சமமான ஊதியம்' எனும் கொள்கைக்கு முரணாக உள்ளது. எனவே, நீண்டகாலமாகப் பணியாற்றும் மேன்பவர் ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது மற்றும் அது தொடர்பான சட்டங்களைத் திருத்துவது குறித்துப் பரிந்துரைகளை வழங்க அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Post a Comment