யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
கோப்பாய் நாவகட்டு பருத்தித்துறை வீதியில் இன்று அதிகாலை இவ் விபத்து இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த உந்துருளியில் பயணித்த 22 மற்றும் 24 வயதான இரண்டு இளைஞர்களும் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் உயிரிழந்துள்ளனர்.
நெல்லியடி பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்களே உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
