யாழில் தங்கை இறந்த செய்தி கேட்டு தமக்கையும் மரணம்-சோகத்தில் ஆழ்ந்த கிராமம்

 

யாழ்ப்பாணம், மண்டைதீவு 6-ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மண்டைதீவு 6-ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சிவமணி சந்திரவதனா (நிர்மலா) என்பவர் காலமானார். 

தனது தங்கையின் மரணச் செய்தியைக் கேள்விப்பட்ட அவரது சகோதரியான சிவசம்பு சந்திரோதயம் (மணி), அந்த அதிர்ச்சியிலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சகோதரிகளின் இந்தத் திடீர் மறைவு மண்டைதீவு கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment