சம்மாந்துறைச் சந்தியில் விபத்து-ஒருவர் பலி{படங்கள்}

 சம்மாந்துறை கிளிவெட்டி சந்திப் பகுதியில் நேற்று இரண்டு கெப் ரக வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்துச் சம்பவம்  ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் மல்வத்தை 01 பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபர் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இருவர் காயமடைந்த நிலையில் சம்மாந்துறை மற்றும் மல்வத்தை ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்திற்கான காரணங்கள் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





Post a Comment