சற்று முன் மீண்டும் அதிர்ந்தது ஜக்கிய அரபு ராச்சியம்

 

ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஆளில்லா விமானம், ஐக்கிய அரபு இராச்சியத்தின் முக்கிய எண்ணெய் துறைமுகமான ஃபுஜைராவை தாக்கியதில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

ஃபுஜைரா எண்ணெய் துறைமுகம் ஐக்கிய அரபு இராச்சியத்தின் மிகப்பெரிய துறைமுகம் மற்றும் எண்ணெய் சேமிப்புக் கிடங்கு ஆகும். 

போர் நிறுத்தம் வருவதற்கு முன்பு, இதுவும் ஆளில்லா விமானத் தாக்குதல்களுக்கு இலக்காகியது. 

தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் பாதுகாப்புப் படைகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

எனினும் இந்தத் தாக்குதல் குறித்து ஈரான் அரசு எந்த தகவல்களையும் இதுவரை வௌியிடவில்லை.



Post a Comment