சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் மத்திய கிழக்கில் போர் சூழல் காரணமாக, தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று (11) கணிசமாக அதிகரித்துள்ளன.
சமீபத்திய அறிக்கைகளின்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,700 - 4,730 அமெரிக்க டொலராகவும், ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 80 - 90 அமெரிக்க டொலராகவும் அதிகரித்துள்ளது.
சர்வதேச சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள விலை உயர்வின் காரணமாக இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அமெரிக்க டொலரின் மதிப்பு வலுவடைதல் மற்றும் சர்வதேச அரசியல் சூழலில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணிகளாக கருதப்படுகின்றன.
இந்த நிலையில், இலங்கையில் 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 393,050 ரூபாவாகவும், 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 360,300 ஆகவும் பதிவாகியுள்ளது.
மேலும் 21 கரட் தங்கத்தின் விலை 343,950 ரூபாயாக பதிவாகியுள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.
