யாழ் காரைநகரில் பெண் தலைமைத்துவம் கொண்ட குடும்பம் வாழ்வாதாரமாக வளர்த்து வந்த ஆடுகள் களவாடப்பட்டுள்ளன.
காரை நகர் பலகாடு பகுதியில் 3.5.2026 அன்று நள்ளிரவில் இந்த திருட்டு சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
நாய்க்கு மயக்க மருந்து பிஸ்கட் கொடுக்கப்பட்டு மொத்தமாக உயர் ரக ஆடுகள் நான்கு திருடப்பட்டுள்ளன.
காலையில் சம்பவம் அறிந்த குறித்த பெண் கிராம அலுவலகரிடமும்-பொலிசாரிடமும் முறைப்பாடு அளித்துள்ளார்.
வாழ்வாதாரத்திற்காக சுயமாக வருமானத்தை ஈட்டுபவர்களின் கண்ணீருக்கு காரணமான இந்த அயோக்கியர்கள் தண்டிக்க பட வேண்டும்-அவர்கள் ஆடுகள் மீள கிடைக்க பொலிசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் காரைநகர் உள் வீதிகளில் மிக வேகமாக-தலை கால் தெரியாமல் பாய்ந்து செல்லும் மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் கடந்த வாரத்தில் எமது ஊடகம் பதிவிட்டிருந்தது
ஆனாலும் பொலிசார் உரிய நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.
கேலியும் நகைச்சுவையுமாத கடந்து செல்லும் காரை வாழ் பெற்றோர்களே ஒரு உயிர் பிரிந்த பின் எங்கள் ஊடகத்தின் விழிப்புணர்வு பதிவுகள். உங்களுக்கு உறைக்கட்டும்.

