இலங்கையில் 62 வயது பேரழகி செய்த அந்தர காணொளிகளை பெற்று செய்த திருவிளையாடல்

 

வடமேல் மாகாண கணினி குற்றத்தடுப்புப் பிரிவு, திட்டமிட்ட மோசடி ஒன்றோடு தொடர்புடைய 62 வயதுடைய பெண் ஒருவரைக் கைது செய்துள்ளது.

பாதிக்கப்பட்டவரிடமிருந்து தவறான காணொளிகளை பெற்றுக்கொண்டு, அதனை இணையத்தில் வெளியிடுவேன் என மிரட்டிப் பணம் பறித்த குற்றச்சாட்டின் பேரிலேயே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் வழங்கிய தகவல்களின்படி, இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்ட நபர், தனது அந்தரங்கத் தகவல்கள் வெளியிடப்படலாம் என்ற அச்சத்தில், சந்தேகநபரின் வங்கிக் கணக்கிற்கு ஒரு இலட்சம் ரூபாவை செலுத்தியுள்ளார்.

அதன்பின்னரே அவர் கணினி குற்றத்தடுப்புப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் நேற்று (6) குருணாகல் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment