மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களுக்கும் காலி மாத்தறை மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களுக்கும் கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எ்ச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த எச்சரிக்கையின்படி, இன்று (02.04.2026) இரவு 11.00 மணி வரை, 15 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 10 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொது மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
