வயலில் வேலை செய்த தாயும் தந்தையும் மழையில் நனைவதை தடுக்க குடை கொடுக்கச் சென்றபோது மின்னல் தாக்கி பலியான யுவதியின் இறுதிக்கிரியைகள் இன்று நடைபெற்றது
சம்பவம்......
மொனராகலை வெல்லவாய, ஹந்தபானகல - கென்ஹத பகுதியில் மின்னல் தாக்கியதில் 23 வயதான இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்
வீட்டிற்கு அருகிலுள்ள விவசாய நிலத்தில் தனது தாய் மற்றும் தந்தை வேலை செய்து கொண்டிருந்துள்ளனர்.
இதன்போது பெய்த கடும் மழை காரணமாக, அவர்களுக்குக் குடை ஒன்றைக் கொடுப்பதற்காக சென்ற போதே இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது.
23 வயதான யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
