நாட்டு மக்களுக்கு எரிபொருள் விநியோகம் குறித்து விசேட அறிவிப்பு ஒன்றை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ளது.
இன்று வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கம் ஒற்றை மற்றும் இரட்டை எண்களைக் கொண்ட அனைத்து வாகனங்களும் தங்களது QR ஒதுக்கீட்டின் கீழ் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும் என கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
வழமையான நடைமுறையின்படி, மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 01 ஆகிய இரு தினங்களும் அடுத்தடுத்து ஒற்றை எண்களாக (Odd numbers) அமைகின்றன.
இதனால் இரட்டை எண்களைக் கொண்ட வாகன உரிமையாளர்களுக்கு எரிபொருள் பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்பதைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்றைய தினம் மாத்திரம் ஒற்றை மற்றும் இரட்டை என இரு வகை இலக்கத் தகடுகளைக் கொண்ட வாகனங்களும் எரிபொருளைப் பெற அனுமதிக்கப்படும்.
இதற்கமைய வாகன உரிமையாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாராந்த QR ஒதுக்கீட்டின் அளவிலேயே எரிபொருளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த சலுகை இன்று மட்டுமே செல்லுபடியாகும்.
அதற்கு அடுத்த நாட்களிலிருந்து வழமையான ஒற்றை-இரட்டை (Odd-Even) முறை மீண்டும் நடைமுறைக்கு வரும்.
