மட்டு உன்னிச்சையில் காட்டுயானை தாக்கியதில் கந்தசாமி என்பவர் உயிரிழப்பு
இன்றையதினம் மட்டக்களப்பு உன்னிச்சை எட்டாம் கட்டை பகுதியில் வைத்து காட்டு யானை தாக்கியதில் மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட புதுமண்டபத்தடியைச் சேர்ந்த 69 வயதான ஐயாத்துரை கந்தசாமி என்பவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மனித யானை மோதல் முடிவின்றி தொடருவதுடன் உயிரிழப்புக்களும் சம்பவித்து வருகின்றது
