சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் குருணாகல், அனுராதபுரம், மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் சில இடங்களிலும் மாலை 2.00 மணிக்குப் பின்னர் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்வதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, இடி மின்னலுடன் கூடிய மழையின் போது அந்தப் பகுதிகளில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
