யாழில் தங்கையின் தங்க மோதிரத்தை களவெடுத்து விற்று, அண்ணன் காதலிக்கு ஐபோன் பரிசளித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக தெரியவருகின்றது.
யாழ் நகர் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த 16 வயதான மாணவன் , தங்கைக்கு அண்மையில் பூப்புனித நீராட்டுவிழா இடம்பெற்றதாகவும், இதன் போது உறவினர் ஒருவரால் தங்கைக்கு தங்க மோதிரம் அன்பளிப்பாக வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
எனினும் அன்றையதினமே தங்கையின் தங்கம் மோதிரம் மாயமானதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் கடந்த தினங்களில் சிலர் மாணவன் விட்டு சென்று அவர் தொடர்பில் விசாரணை செய்ததாக கூறப்படுகின்றது.
அதன்போது மாணவனின் பெற்றோர், மகனை தேடுவதற்கான காரணம் கேட்ட போது தமது உறவினரான மாணவிக்கு மாணவனால் வாங்கிக் கொடுக்கப்பட்ட மிகப் பெறுமதியான ஐபோன் தொடர்பாகவும் அந்த ஐபோனில் காணப்பட்ட மாணவனின் புகைப்படங்கள் தொடர்பாகவும் தெரியபடுத்தப்பட்டுள்ளது.
ஐபோன் வாங்கிய மாணவியும், மாணவனும் ஒரே தனியார் கல்வி நிலையத்தில் கற்று வந்த நிலையில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாகவும் தெரியவருகின்றது.
இதனையடுத்து விளையாட்டு மைதானத்தில் நின்றிருந்த மாணவனை குடும்பத்தினர் அழை்த்து வந்து வந்து விசாரணை செய்த போதே தங்கையின் மோதிரத்தை விற்று தனது காதலிக்கு ஐபோன் வாங்கிக் கொடுத்த விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக கூறப்படுகின்றது.