காதலுக்காக Milkshake இல் விஷம் கலந்து தந்தை கொன்ற மகள்; உறவு முறிந்ததால் காட்டிக்கொடுத்த காதலன்!

 இந்தியாவில் Milkshake இல் விஷம் கலந்து தந்தையை பொலிஸ் தலைமைக் காவலராக பணிபுரிந்த தந்தையை மகள் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மகாராஷ்டிராவின் சந்திராப்பூர் மாவட்டத்தில் பொலிஸ் தலைமைக் காவலராக ஜெயந்த் பல்லாவர் என்பவர் பணியாற்றி வந்தார். கடந்த 2023 மார்ச் 25, சந்திராப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பணியில் இருந்த ஜெயந்த் பல்லாவதி டீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.ஆரம்பத்தில் இது தற்செயலான மரணம் என்று கருதப்பட்டது. ஆனால் அவர் சொந்த மகளால் நூதன முறையில் கொலை செய்யப்பட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இவர்களின் திருமணத்திற்கு தந்தை ஜெயந்த் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஆர்யா, தந்தையைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். சம்பவத்தன்று தந்தை வேலைக்குச் செல்லும் முன், ஆர்யா அவருக்கு விஷம் கலந்த மில்க்‌ஷேக்கை கொடுத்துள்ளார்.அதை குடித்த சிறிது நேரத்திலேயே ஜெயந்த் பணியிடத்தில் மயங்கி விழுந்து இறந்துள்ளார். தந்தை இறந்த பிறகு, ஆர்யா கருணை அடிப்படையில் பொலிஸ் வேலை பெற்று, பயிற்சியில் இருந்துள்ளார்.

இதற்கிடையில் ஆர்யாவுக்கும் ஆஷிஷுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஆஷிஷ், கொலை குறித்த ஆதாரங்களை பொலிஸாரிடம் ஒப்படைத்தார்.பொலிஸார் இந்த வழக்கை மீண்டும் கையில் எடுத்து, ஜெயந்தின் உடற்கூறு ஆய்வு அறிக்கையை மறுபரிசீலனை செய்தனர். அதில் அவர் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டது உறுதியானது. விசாரணையில் ஆர்யா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அவர் பணிநீக்கம் செய்யப்பட்டு தற்போது கைது செய்யப்பட்டார்.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.