கொஹுவல, களுபோவில பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து சீன யுவதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல்துறை தலைமையகம் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளது.
இந்த கொலை சம்பவம் நேற்று (23) இடம்பெற்றுள்ளதுடன் , 26 வயதுடைய சீன யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளின்படி, உயிரிழந்த யுவதியுடன் முன்னதாக காதல் தொடர்பைப் பேணிவந்த சீன இளைஞரே இந்தக் கொலையைச் செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
யுவதி கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக கொஹுவல காவல் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கொலையின் பின்னர் குறித்த சீன இளைஞர் அந்த வீட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளார். தலைமறைவாகியுள்ள சந்தேகநபரை கைது செய்வதற்காக கொஹுவல காவல்துறையிளர் விசேட தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.
