2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு முடிவுகள் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்பு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெறுபேறுகளை வெளியிடுவதற்கு தேவையான செயல்முறைகள் தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே நேற்று முன்தினம் (24) உறுதிப்படுத்தியுள்ளார். நவம்பர் 10ஆம் திகதி ஆரம்பமான உயர்தர பரீட்சையின் சில பாடங்கள், டித்வா புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, ஜனவரி 12 முதல் 20 வரை மீண்டும் நடத்தப்பட்டன. இதற்கமையஈ அனைத்து பரீட்சைகளும் 16ஆம் திகதி நிறைவடைந்தன. 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சுமார் மூன்று லட்சம் பரீட்சார்த்திகள் பங்கேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், அடுத்த ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள உயர் தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நேற்று முதல் கோரப்பட்டுள்ளதுடன், கடைசி திகதி அடுத்த மாதம் 24ஆம் திகதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது.
