பாடசாலை மாணவர்களுக்கு நவீன மற்றும் ஒழுங்கற்ற முறையில் சிகை அலங்காரங்களை செய்வதை தவிர்க்குமாறு சம்மாந்துறை பிரதேசத்தில் உள்ள சிகை அலங்கார நிலைய உரிமையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை பிரதேச சபை, வலய கல்வி அலுவலகம், பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை மற்றும் சமூக சேவை அமைப்புகள் இணைந்து மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை மீறி செயற்படும் நிலையங்களின் வர்த்தக அனுமதிப்பத்திரம் உடனடியாக இரத்து செய்யப்படும் எனவும் விதியை மீறும் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் சம்மாந்துறை பிரதேச சபை அறிவித்துள்ளது.
பாடசாலை மாணவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்தவும், கல்வி சூழலை பாதுகாக்கவும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
