காரைநகர் உள் வீதிகளில் போக்குவரத்து பொலிசாரின் கண்காணிப்புகள் மிக அரிதாகவே காணப்படுகிறமையால் தலைக்கவசம் இன்றியும்-இலக்க தகடுகள் இன்றியும் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் தலை கால் தெரியாமல் வாகனத்தை செலுத்தி வருகின்றனர்.
சிறுவர்கள்-சிறுமிகள் கூட தலைக்கவசம் இன்றி மோட்டார் வண்டிகளை காரைநகரில் செலுத்துவது வழமை போல் மாறி வருகிறது.
இக் காரணங்களால் பாதசாரிகள் மிக அச்ச உணர்வுடன் பயணிக் வேண்டிய சூழ் நிலை உருவாகியுள்ளது என காரை வாழ் சமூக உணர்வாளர்களும் மக்களும் தெரிவிக்கின்றனர்.
காலை மற்றும் மாலை நேரங்களிலும் விடுமுறை தினங்களிலும் போக்குவரத்து பொலிசார் கண்காணித்து இவ்வாறு முறை தவறி மற்றவர்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் விதமாக வாகனங்களை செலுத்துபவர்கள். மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொலிசாரிடம் காரை வாழ் மக்கள் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.
பொலிசார் இவ் விடயத்தை கண்டு கொள்ளாத பட்சத்தில் ஜனாதிபதியின் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும் என காரை வாழ் சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.
