நவகிரகங்களில் இளவரசனாக கருதப்படுபவர் தான் புதன். இந்த புதன் சந்திரனுக்கு அடுத்தப்படியாக குறுகிய நாட்களில் தனது நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவர். இப்படிப்பட்ட புதன் தற்போது சனி பகவானின் கும்ப ராசியில் உள்ளார்.
இந்த புதன் ஏப்ரல் 11 ஆம் திகதி குரு பகவானின் மீன ராசிக்குள் நுழையவுள்ளார். மீன ராசிக்கு புதன் செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.குறிப்பாக 4 ராசிக்காரர்கள் இந்த புதன் பெயர்ச்சியால் தொழிலில் நல்ல முன்னேற்றத்துடன், பல புதிய வாய்ப்புக்களுடன், நல்ல நிதி ஆதாயமும் கிடைக்கும்.
மீனம்: இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் காணக்கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முடிவெடுக்கும் திறன் மேம்படும். தொழில் வாழ்க்கையில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. மேலும் வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலைமை படிப்படியாக மேம்படும்.
கும்பம்: இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வருமானத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் பெருகும். வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது வாய்ப்புள்ளது. எந்த ஒரு வேலையை செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கும். பேச்சாற்றல் மேம்படும்.
ரிஷபம்: வருமானம் அதிகரிக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். தொழிலில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். நண்பர்களால் எதிர்பாராத பல நன்மைகள் கிடைக்கலாம். முதலீடுகளை செய்யும் போது புத்திசாலித்தனமாக நன்கு யோசித்து செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
கடகம்: நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். மாணவர்கள் வெளிநாட்டில் படிக்க விரும்பினால், அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம். வெளிநாட்டுடன் தொடர்புடைய வேலை செய்பவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். வணிகர்களுக்கு தங்கள் வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மன அமைதி அதிகரிக்கும்.
