உண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மற்றும் வைரல் செய்திகள், இலங்கை, ஆஸ்திரேலியா,கனடா,இந்தியா, தமிழ்நாடு , தொழில்நுட்பம்,செய்திகள், வர்த்தகம், விளையாட்டு, சினிமா, ஆன்மிகம்
தொடக்கூடாத கையைத் தொட்டதா ஈரான்? ஜப்பான் செய்த அதே தவறு.. 30 விநாடியில் மாறப்போகும் உலக வரைபடம்!
சிங்கத்தின் வாலைப் பிடித்து இழுத்துவிட்டது ஈரான்!" - இதுதான் இப்போது சர்வதேச அரசியல் நிபுணர்களின் ஒற்றை வரி வர்ணனை.
ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, அமெரிக்காவின் பிரம்மாண்ட விமானம் தாங்கிக் கப்பலான 'USS ஆபிரகாம் லிங்கன்' (USS Abraham Lincoln) மீது நான்கு பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசித் தாக்கியதாக ஈரான் ராணுவம் (IRGC) அறிவித்துள்ளது.
அமெரிக்காவோ, "அந்த ஏவுகணைகள் கப்பலுக்கு அருகில் கூட வரவில்லை, இது ஒரு பச்சை பொய்" என மறுத்தாலும், ஈரான் தொடுத்திருக்கும் இந்த 'நேரடி மோதல்' ஒரு பயங்கரமான வரலாற்றுப் பக்கத்தை நினைவுபடுத்துகிறது. அதுதான் 'பேர்ல் ஹார்பர்' (Pearl Harbor) தருணம்!
பேர்ல் ஹார்பர்: அன்று ஜப்பான்... இன்று ஈரானா?
1941-ல் அமெரிக்காவின் பேர்ல் ஹார்பர் தளத்தின் மீது ஜப்பான் இதேபோன்ற ஒரு திடீர் தாக்குதலை நடத்தியது. அன்றுவரை அமைதியாக இருந்த அமெரிக்கா, அந்த ஒரே ஒரு தாக்குதலால் ஆக்ரோஷமடைந்து இரண்டாம் உலகப்போரில் குதித்தது. அதன் விளைவு என்னவென்று ஜப்பானுக்குத் தெரியும் (ஹிரோஷிமா, நாகசாகியை உலகம் மறக்காது).
1945-இல் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் மீது அமெரிக்கா நடத்திய அணு ஆயுதத் தாக்குதல், ஜப்பானை நிலைகுலையச் செய்த ஒரு வரலாற்றுப் பேரழிவு. சில நொடிகளில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர்; நகரங்கள் அப்படியே சாம்பலாகிப் போயின. ஆனால், அதன் கொடூரம் அதோடு முடியவில்லை. கதிர்வீச்சின் தாக்கம் (Radiation) காரணமாக, தப்பிப்பிழைத்தவர்களும் புற்றுநோய் மற்றும் விசித்திரமான நோய்களால் பல தசாப்தங்களாக அவதிப்பட்டனர். பிறக்கும் குழந்தைகளுக்குக் கூட ஊனங்கள் ஏற்பட்டன. ஜப்பானின் பொருளாதாரம் மற்றும் ராணுவ பலம் முற்றிலுமாக சிதைந்து, அந்த நாடு சரணடைய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது. இன்றும் அந்தத் தழும்புகள் ஜப்பானியர்களின் மனதில் நீங்காத வடுக்களாக உள்ளன.
இன்று அதே போன்ற ஒரு தவறை ஈரான் செய்திருப்பதாகக் கருதப்படுகிறது.
அமெரிக்காவின் கௌரவம்: ஒரு விமானம் தாங்கிக் கப்பல் என்பது அமெரிக்காவைப் பொறுத்தவரை மிதக்கும் ஒரு தீவு. அதன் மீது தாக்குதல் நடத்துவது என்பது நேரடியாக அமெரிக்காவின் இறையாண்மை மீது கை வைப்பதற்குச் சமம்.
தொடக்கூடாத கை: அமெரிக்காவின் 'Operation Epic Fury' ஏற்கனவே ஈரானைத் திணறடித்து வரும் நிலையில், லிங்கன் கப்பலைத் தாக்க முற்பட்டதன் மூலம் ஈரான் தனது அழிவுக்குத் தானே 'ஸ்கெட்ச்' போட்டுள்ளது.
அணு ஆயுதப் போர் (Nuke War) - வாசலில் நிற்கும் எமன்!
ஈரானின் இந்த நடவடிக்கை, நிலைமையை மிக மோசமான நிலைக்குத் தள்ளியுள்ளது.
நேரடி மோதல்: இதுவரை நிழல் யுத்தம் (Proxy War) நடத்தி வந்த ஈரான், இப்போது அமெரிக்காவுடன் நேரடியாக மல்லுக்கட்டத் தொடங்கிவிட்டது.
அணு ஆயுத மிரட்டல்: ஈரான் ஒருவேளை தற்காப்புக்காக தனது அணுசக்தி ரகசியங்களைப் பயன்படுத்த முயன்றால், அதற்குப் பதிலடியாக அமெரிக்கா தனது அணு ஆயுதங்களை (Tactical Nukes) ஏவத் தயங்காது.
உலக நாடுகளின் அணிவகுப்பு: ஒருபுறம் அமெரிக்கா-இஸ்ரேல், மறுபுறம் ரஷ்யா-சீனா-ஈரான் என உலகம் இரண்டு பிளவுகளாகப் பிரியத் தொடங்கினால், அது மூன்றாம் உலகப்போரின் 'அணு ஆயுத' அத்தியாயமாக மாறும்.
ஈரானின் தப்புக்கணக்கு!
"ஈரான் தனது உள்நாட்டு மக்களின் கோபத்தைத் திசைதிருப்பவே இதுபோன்ற அதிரடி அறிவிப்புகளை வெளியிடுகிறது. ஆனால், அமெரிக்கா இதைப் போருக்கான ஒரு காரணமாக (Casus Belli) எடுத்துக்கொண்டால், ஈரானின் வரைபடமே சிதைக்கப்படும்" என்கிறார்கள் உளவுத் துறை அதிகாரிகள்.
ஏற்கனவே வெனிசுலா அதிபரைத் தூக்கிய ட்ரம்ப், இப்போது ஈரானின் மையப்பகுதியையே சிதைத்து வருகிறார். ஆபிரகாம் லிங்கன் கப்பலைத் தீண்ட நினைத்தது, எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றிய கதைதான்!