நாளை(வெள்ளிக்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “உலகப் புகழ்பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் நாளை சனி பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. இதனால் நாளை (வெள்ளிக்கிழமை) சனி பெயர்ச்சி முன்னிட்டு காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை தேர்வுகள் நடைபெறும் வகுப்புக்கு மட்டும் நாளை வழக்கம்போல் நடைபெறும்.” என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
