"நீ எனக்கு வேண்டாம், எங்கேயாவது போய் செத்துவிடு". மனைவி சொன்ன அந்த ஒற்றை வார்த்தை.. கணவன் எடுத்த விபரீத முடிவு..!

நீ எனக்கு வேண்டாம், எங்கேயாவது போய் செத்துவிடு". மனைவி சொன்ன அந்த ஒற்றை வார்த்தை.. கணவன் எடுத்த விபரீத முடிவு..!

Karnataka -மாநிலம் சிக்கபள்ளாப்பூர் அருகே உள்ள குண்ட்லஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த முனிராஜு - சுனிதா தம்பதியின் 13 ஆண்டுகால இல்லற வாழ்க்கை, சமூக வலைதள மோகத்தால் சிதைந்து போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பொருளாதார ரீதியாக வசதியாக இருந்தவரை தனது கணவர் மீது அதீத அன்பு செலுத்திய சுனிதா, முனிராஜுவின் நிதி நிலைமை மோசமடைந்த நிலையில் தடம் மாறத் தொடங்கியுள்ளார். வீட்டு வேலைகளைக் கவனிக்காமல் எப்போதும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்வதிலும், இளைஞர் ஒருவருடன் ரகசியக் காதலில் திளைப்பதிலும் அவர் ஆர்வம் காட்டியது குடும்பத்தில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

கணவன் வேலைக்குச் சென்ற நேரத்தில் சமூக வலைதளத்தில் பழகிய நபருடன் சுனிதா ஆறு மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பெற்றோரின் தலையீட்டால் மீண்டும் குடும்பத்திற்குத் திரும்பிய அவர், மனம் மாறாமல் கணவனைத் தொடர்ந்து உதாசீனப்படுத்தி வந்துள்ளார். எதற்கெடுத்தாலும் முனிராஜுவைக் குறை கூறி வந்ததோடு மட்டுமல்லாமல், “நீ எனக்கு வேண்டாம், எங்கேயாவது போய் செத்துவிடு” என்று கொடூரமாகப் பேசி மனரீதியான அழுத்தத்தை வழங்கியதாகக் கூறப்படுகிறது.

தன்னுடைய எல்லாமே மனைவிதான் என்று வாழ்ந்த முனிராஜு, தொடர்ச்சியான அவமானங்களால் விரக்தியின் எல்லைக்குச் சென்றுள்ளார். தான் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவெடுத்த தருணத்தில் கூட, மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வாட்ஸ்-ஆப் ஸ்டேட்டஸாக வைத்துவிட்டு விபரீத முடிவை எடுத்துள்ளார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஒரு கணவனின் வாழ்வு மனைவியின் சொற்களால் நிலைகுலைந்து போனது வேதனையான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

தற்போது முனிராஜுவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சுனிதா அளித்த மன உளைச்சலே இந்த மரணத்திற்கு காரணம் என்றும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். உடற்கூராய்வு அறிக்கையின் முடிவில்தான், இது தற்கொலையா அல்லது இதற்குப் பின்னால் வேறு ஏதேனும் சதி உள்ளதா என்ற உண்மை வெளிச்சத்திற்கு வரும்.

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.