யாழ்ப்பாணம் - வடமராட்சி வடக்கு - பருத்தித்துறை கடலில் தொழிலுக்கு சென்ற இளம் மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு கடலுக்குச் சென்ற குறித்த தொழிலாளியின் படகின் இயந்திரத்தில் தூண்டில் கயிறு சிக்கியுள்ளது. அதனை சீர்செய்ய முற்பட்ட போது கடலில் வீழ்ந்து காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.
பின்னர் அவருடன் சென்ற சக தொழிலாளி தகவல் வழங்கியதைத் தொடர்ந்து பருத்தித்துறை கொட்டடிப் பகுதி மீனவர்கள் சுமார் 25க்கு மேற்பட்ட படகுகளில் தேடுதல் நடாத்தி சடலத்தை கண்டுபிடித்து இன்று காலை 10 மணியளவில் கரை சேர்ந்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி பருத்தித்துறை கொட்டடியைச் சேர்ந்த 23 வயதுடைய விஜயகுமார் நிக்சன் என்ற ஒரு குழந்தையின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

