UP மாநிலம் அம்ரோகா மாவட்டத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்த மனைவியின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கஜ்ரௌலா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாராநகர் கிராமத்தைச் சேர்ந்த ஓம்பால் என்பவருக்கும் கல்லோ என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில் அந்தப் பெண் பப்லு என்பவருடன் ரகசியத் தொடர்பில் இருந்துள்ளார்.
இது குறித்து தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் அவர்கள் பிரிந்து வாழ்ந்து வந்தனர். பின்னர் உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்ற பஞ்சாயத்தில் சமரசம் ஏற்பட்டு இருவரும் மீண்டும் இணைந்து வாழ்ந்து வந்த போதிலும் அந்தப் பெண் தனது கள்ளக்காதலைத் தொடர்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஹோலி பண்டிகை அன்று மாலையில் கள்ளக்காதலன் பப்லு ஓம்பாலின் வீட்டிற்கு வந்து ஹோலி கொண்டாடியுள்ளார். இதற்கு ஓம்பால் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த கல்லோ தனது காதலனுடன் சேர்ந்து கணவனைத் தூக்கிலிட்டுப் படுகொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு இருவரும் அங்கிருந்து தப்பியோடிய நிலையில் தகவலறிந்து வந்த காவல்துறையினர் ஓம்பாலின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை நடந்த சில மணி நேரங்களிலேயே தலைமறைவாக இருந்த மனைவியைக் காவல்துறையினர் கைது செய்த நிலையில் தப்பியோடிய காதலனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். தர்மத்தை மீறிய இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
