ஐரோப்பாவில் அதிரடி மாற்றம்! ஜூன் முதல் கட்டாய நாடுகடத்தல் சட்டம் அமல்
ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் (European Union) சட்டவிரோதமாக நுழைபவர்கள் மற்றும் ஏற்கனவே தங்கியிருப்பவர்களுக்கு எதிராக மிகக் கடுமையான புதிய சட்டங்களை ஐரோப்பிய நாடாளுமன்றம் கொண்டு வந்துள்ளது.
இந்த புதிய சட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
"AZMANI A10-0048/2026" அறிக்கையின்படி, இதற்கு ஆதரவாக 389 வாக்குகளும், எதிராக 206 வாக்குகளும் கிடைத்துள்ளன. இதன் மூலம் இந்தத் திட்டம் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளுக்குள் முறையான அனுமதியின்றி தங்கியிருக்கும் நபர்களை, மிக விரைவாகவும் கட்டாயமாகவும் அவர்களது சொந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்ப இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது.
இனி வரும் காலங்களில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் முறையான ஆவணங்கள் இன்றி தங்குவது என்பது முன்பை விட மிகவும் கடினமான ஒன்றாக மாறும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
"நாடுகடத்தல் காலம் தொடங்கிவிட்டது" (The era of deportations has begun) என்று இதில் மிகக் கடுமையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஐரோப்பாவிற்குச் செல்லத் திட்டமிடுபவர்களுக்கும், அங்கு தங்கியிருக்கும் வெளிநாட்டினருக்கும் நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
