இந்திய பெருங்கடலில் மூழ்கிய ஈரானிய போர்க்கப்பலில் இருந்து காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் இலங்கை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அதற்கு ஆதரவாக இந்திய கடற்படையும் இணைந்து செயல்பட்டு வருகிறது.
கடலில் காணாமல் போனவர்களை விரைவாக கண்டுபிடிக்கும் நோக்கில் இணைந்து செயல்படும் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
