இத்தாலி பொலிஸ் சேவையில் பணியாற்றிய ஒரேயொரு இலங்கை அதிகாரி என அறியப்படும் ஷெஹான் பெர்னாண்டோ, தன்னைத்தானே தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை அதிகாரி மிலானோ நகரில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.வென்னப்புவ - தல்தெனிய பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய ஷெஹான் பெர்னாண்டோ என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவரது உடலுக்கு அருகில் அவரது சேவை துப்பாக்கி மீட்கப்பட்டதாகவும் இத்தாலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் தனது சேவைத் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் நிலையில் அவரது உயிரிழப்புக்கான காரணம் வெளியாகவில்லை.இத்தாலி பொலிஸ் திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரேயொரு இலங்கையர் இவர் என்பதால், இவரது மரணச் செய்தி இத்தாலிய அதிகாரிகளுக்கும் அங்கு வாழும் இலங்கைச் சமூகத்திற்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
