இலங்கையில் தங்கத்தின் விலையானது இன்று (26) காலையுடன் ஒப்பிடுகையில் 5000 ரூபா குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று காலை 24 கரட் தங்கம் ஒரு பவுண் 393,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 5000 ரூபாயால் குறைக்கப்பட்டு 388,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.22 கரட் தங்கம் பவுண் ஒன்று 361,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 4500 ரூபாயால் குறைக்கப்பட்டு 357,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,625 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
