ஜோதிடத்தின் படி நவகிரகங்களின் இயக்கங்கள் மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதுவும் கிரகங்கள் ஒன்றிணைந்து யோகங்களை உருவாக்கும் போது, அதன் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும்.
மார்ச் மாதத்தில் குரு பகவானின் மீன ராசியில் அற்புதமான 3 மூன்று கிரகங்களின் சேர்க்கையால் சக்தி வாய்ந்த யோகம் உருவாகவுள்ளது.சுக்கிரனால் உருவாகும் திரிகிரக யோகத்தால் எந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள் என நாம் இங்கு பார்ப்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. நீண்ட கால நிதி பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் தொடங்கினால் நல்ல லாபத்தைக் காணலாம். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், இந்த யோக காலத்தில் நல்ல வேலை வாய்ப்புக்கள் தேடி வரும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தங்களால் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். கூட்டு தொழில் செய்பவர்களுக்கும் மிகவும் சிறப்பாக இருக்கும். பரம்பரை சொத்து தொடர்பான விஷயங்களில் நல்ல வெற்றி கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
மீனம்
மீன ராசியின் முதல் வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. தொழிலதிபர்களும் இந்த யோகத்தால் நல்ல பலனைப் பெறுவார்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. என்ன தான் அதிர்ஷ்டம் ஆதரவாக இருந்தாலும், முயற்சிகளை கைவிடாமல் தொடர வேண்டும்.
